தாழ்வழுத்த மின் பாதை, 5.85 லட்சம் மின் சுற்று கி.மீ., - உயரழுத்த மின் பாதை, 1.90 லட்சம் மின் சுற்று கி.மீ., - மின் வினியோக டிரான்ஸ்பார்மர், 2.25 லட்சம் கி.மீ., ஆகியவை உள்ளன.மின் வாரியம் சார்பில், துணைமின் நிலையம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி ஆகியவற்றில், அவ்வப்போது, பழுது ஏற்படாமல் இருக்க, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, சம்பந்தப்பட்ட பகுதிகளில், நாள் முழுவதும், மின் வினியோகம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பராமரிப்பு பணிக்காக, மின் தடை செய்யப்பட்டது. இந்த விவரம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு, முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரி முதல், பராமரிப்பு மின் தடை நேரம், காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை குறைக்கப்பட்டது. ஆனால், பராமரிப்பு பணி நடக்கும் இடங்களில், முறையற்ற அதாவது, பகல் 2:00 மணியை தாண்டியும், மின் தடை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
தீர்வு காண்பது கடினம்:சீரான மின் வினியோகத்திற்காகவும், உபகரணங்கள் பழுது அடையக் கூடாது என்பதற்காகவும், ஆறு மணி நேரம் தொடர் மின் தடையை பொறுத்து கொள்கிறோம். பணி நடக்கும் இடங்களில், இரவு வரை, மின் தடை செய்யப்படுவதால், எந்த பணியையும் திட்டமிட்டு செய்ய முடியவில்லை.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால், அவர்கள், பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய பணிகள் கூட, சில நேரங்களில், அதிக நேரத்தை எடுத்து கொள்கிறது. இதனால், சில இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட, மின் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு, தீர்வு காண்பது கடினம்.இவ்வாறு, அவர் கூறினார்.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment