ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'கத்தி'. தீபாவளி அன்று வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ் கரண் தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.
வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள 'புலிப்பார்வை' என்ற படம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் தடை செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞர் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ஒரு படம் தணிக்கையான பிறகு அதில் தலையிட முடியாது என்றும், எனவே இப்படங்களுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment