கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள மாவத்தூரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது-50). விவசாய தொழிலாளியான இவர் தரகம்பட்டி அடுத்துள்ள அக்கரப்பட்டிக்கு தனது உறவினரைப் பார்க்க சனிக்கிழமை சென்றிருந்தார்.
அப்போது வழியில் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் தோட்டத்தில் உள்ள 80 அடி ஆழக் கிணற்றில் கோழி ஒன்று விழுந்து தத்தளித்தது.
இதைக் காப்பாற்ற கயிறு மூலம் உள்ளே இறங்கியுள்ளார் பிச்சை. சிறிது நேரத்தில் கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்றுக்குள் கிடந்த பிச்சையை வெளியே கொண்டுவந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக பாலவிடுதி காவல்நிலைய உதவி ஆய்வாளர் நீலமேகம் வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment