சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களுரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. ஜெயலலிதாவுக்கு ரூபாய் 100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூபாய் 10 கோடியும் அபராம் விதித்தும் உத்தரவிட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இவர்கள் 4 பேரும் பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த ஜாமின் மனுவில், உடல்நிலை, வயது அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார் எனவும், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரின் சார்பிலும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மனுவையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment