உடனடியாக மாற்றுக் கிட்னி பொருத்தினால் தான் பிள்ளையை உயிர்பிழைக்க வைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். குறித்த கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மொத்தமாக 5 இலட்சம் ரூபாய் இந்தியப் பணம் செலவாகும் என சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை கூறியுள்ளது.
நாளாந்தம் பெயிண்டிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளித் தந்தையான ரவீந்திரன், தன் மகளின் உயிரைக் காக்க உறவினர்கள், நண்பர்களிடம் சென்று தன்னால் முடிந்தளவு இரண்டு இலட்சம் ரூபாய்களைத் திரட்டி உள்ளார். அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் புவனேஸ்வரியின் உடல்நிலை மிகவும் மோசமாகி இன்று 18.10.2014 மருத்துவமனையில் அவசரமாக சேர்த்துள்ளார்கள்.
உடனடியாக கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டிய நிலையில் அந்த பெற்றோர்கள் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்கள்.
சிறிது தாமதித்தாலும் பெண்பிள்ளையின் உயிருக்கு ஏதும் ஆகிவிடும் நிலையில் பரிதவிக்கின்றது புவனேஸ்வரியின் குடும்பம்.
சொந்த நாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் ஒக்கூர் அகதிகள் முகாமிலும் கஷ்டத்தின் மேல் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்தக்கு விழுந்த பேரிடி தான், மகளுக்கு கிட்னி செயலிழந்து விட்டது என்கிற செய்தி.
பிள்ளையின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுவீர்களா?
முடிந்தளவு இந்தச் செய்தியினை அனைவரிடமும் பகிர்ந்து தயவு செய்து இந்தப் பிள்ளையின் உயிர் காக்க உதவுங்கள். புவனேஸ்வரியின் மருத்துவ ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பிள்ளையின் அம்மாவின் கைத்தொலைபேசி இலக்கம்: 009159148943
அவர்களுடைய வங்கிக் கணக்கு விபரம்:
INDIAN BANK
A .RAVINDRAN
AC NO: 6240970957
OKKUR BRANCH






.jpg)
.jpg)

.jpg)






Post a Comment