ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார்.
இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தமிழீழத்தினை கைவிட்டு விட்டதான நிலைப்பாடு அவர்கள் மீதான சிறிலங்காவின் தடை விலகலுக்கு வழியமைத்துள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவரை உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சமீபத்தில் லண்டனில் சந்தித்து உரையாடியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவும் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமையவே தமிழர்களுக்கான தீர்வு திட்டம் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தடை விலகும் பட்சத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சிறிலங்காவுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக அந்தச் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment