கோலங்கள் போட்ட நடிகைக்கு இப்போதும் சீரியல் வாய்ப்புகள்

ஒரு காலத்தில் சின்னத்திரையில் அழகழகான கோலங்கள் போட்ட நடிகைக்கு இப்போதும் சீரியல் வாய்ப்புகள் நிறைய வருகிறது. ஆனால் நடிகை தான் உச்சத்தில் இருந்தபோது வாங்கிய சம்பளத்தில் இருந்து இறங்கி வராததால் எல்லாரும் விலகி ஓடுகிறார்களாம்.


வெற்றி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பவர்கள் சினிமாவில் நுழைய ஆர்வம் காட்டுவதால் நிகழ்ச்சியில் அதிகம் கவனம் இல்லாமல் இருக்கிறார்களாம். இதனால் இத்தனை வருடங்களுக்கு சினிமாவுக்கு செல்ல மாட்டேன் என்று ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்களாம்.


கலை குடும்பத்து வாரிசு நடிகை இப்போது டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து பெரிய நடிகர்களின் பெயரைக் கொண்டு தன் தயாரிப்பில் தனது பாய்பிரண்ட் இயக்கி இருக்கும் படத்தை வாங்குமாறு சேனல்களை கேட்டு வருகிறாராம். இல்லாவிட்டால் எனக்கு ஒரு நிகழ்ச்சி தாருங்கள் என்கிறாராம்.


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி சேனலுக்கு இன்னொரு முன்னணி சேனலிலிருந்து நிறைய பேர் சென்று விட்டார்களாம். இதனால் சரியான ஆட்கள் இன்றி தவிக்கிறதாம் சேனல். இதனால் மற்ற சேனல்களிலிருந்து ஆட்களை இழுக்க முயற்சித்து வருகிறதாம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template