லிங்கா படப்பிடிப்பில் விபத்து: 5 மாடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 

புறநகர் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.இந்த செட் 5 மாடி உயரம் கொண்டது. இதனை சுதர்சன் என்ற ஊழியர் மேற்பார்வை செய்து வந்தார். 

பாடல் காட்சி எடுக்க செட் தயாராக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வந்தவர் தவறி 5 மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் சில மாதங்கள் நடக்க முடியாது மற்றபடி உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறினர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template