கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஞ்ஜூராவ பகுதி, மெடில்ல அத்லா பிரதேசத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செயயப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் தம்பியை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இச்சம்பவம் திங்கட்கிழமை(6) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதுள்ளது. 35 வயதான எஸ்.செனவிரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில், உயிரிழந்த நபரின் தம்பியே இக்கொலையை செய்திருக்கலாமென
கினிகத்ஹேனை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தம்பியின் உடம்பில் சிறுகாயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் இதனாலேயே அவரை சந்தேகித்து கைதுசெய்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் சிகிச்சைகளுக்காக கினிகத்ஹேனை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் குடும்ப பிரச்சினையால் இருவரும் மனைவிகளை பிரிந்து வாழ்வதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்;கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்தோடு காணி பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
சடலம் தற்போது கினிகத்ஹேனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment