’இளையதளபதி’ விஜய் படங்களுக்கு தமிழகத்தில் மற்றுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல எதிர்பார்ப்புடன் வரவேற்பு இருக்கும். அதுவும் அதிநவீன தொழில்நுட்பத்தில் விஜய் படம் வெளியாகின்றது என்றால் எதிர்பார்ப்புகள் பலமடங்கு எகிரும் என்பதை கூறவேண்டிய அவசியமே இல்லை.
இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட IMAX என்ற தொழில்நுட்பத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் ஒருசில நாடுகளில் வெளியாக இருப்பதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளன. நெதர்லாந்தில் கத்தி IMAX தொழில்நுட்பத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. மேலும் லைகா பல நாடுகளில் வியாபாரத்தொடர்பு வைத்திருப்பதால் அவர்களுடைய செல்வாக்கின் மூலம் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலும் IMAX-ல் கத்தி படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நாளைக்குள் இந்த தொழில்நுட்பத்தில் எத்தனை தியேட்டர்களில் கத்தி வெளியாகிறது என்ற தகவல் வந்துவிடும். IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் கத்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.துரதிர்ஷ்டவசமாக சென்னையிலும், இந்தியாவில் உள்ள பல நகரங்களிலும் IMAX தொழில்நுட்ப வசதியுள்ள தியேட்டர்கள் இல்லாத காரணத்தினால் கத்தி IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமற்றம் அடைந்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை திரையில் பார்த்தால் படம் மிக துல்லியமாகவும், அதிக சவுண்ட் எஃபெக்ட்டிலும், முப்பரிமாண வடிவத்திலும், ஹை ரெஸலூசனிலும் தெரியும். இந்த தொழில்நுட்ப வசதிகள் உள்ள தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது நமது துரதிஷ்டம். ஆனால் மும்பை, பெங்களூர் ,ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் IMAX தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தியேட்டர்கள் இருக்கின்றது. ஆனாலும் அதிலும் ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment