இந்தியாவுக்கு எதிராக நடைபெற்றுவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை அவசரமாக நிறுத்திக்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இன்று தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறும் நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்திய அணி எதிர்வரும் போட்டிகளுக்கான காலப்பகுதியில் இலங்கையுடன் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்தியாவுடன் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்று, ஒரு இருபதுக்கு-20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் என்பன எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் கொடுப்பனவு தொடர்பாக அந்த நாட்டு கிரிக்கெட் சபைக்கும் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே தொடர் இடையில் கைவிடப்பட்டதற்கான காரணமாகும்.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்றது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment