நோர்வேயில் ஈழத் தமிழரின் திரைப்படம் வெளியீடு

இலங்கையில் யுத்தம் நடந்தபோது இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று குடிபுகுந்த நாடுகளில் ஒன்று நார்வே. இங்கு கணிசமான அளவில் ஈழத் தமிழர்கள் வசிக்கிறார்கள். வசீகரன் சிவலிங்கம் என்பவர் தமிழ் படங்களை வாங்கி அங்கு விநியோகித்து வருகிறார். ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவையும் அங்கு நடத்தி வருகிறார்.


அவர் தற்போது முழுக்க முழுக்க நார்வேயில் தயாரிக்கப்பட்டு, நார்வே வாழ் தமிழர்களால் நடிக்கப்பட்டு, நார்வே தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு நார்வேயிலேயே திரையிடப்பட்டுள்ள ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் பெயர் 9சி ஆஸ்லோ (ஆஸ்லோ என்பது நார்வேயின் தலைநகர்) திரு இசை அமைத்திருக்கிறார், துருபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஸ்ரீபன் இயக்கி இருக்கிறார். ஜெயசாந்த், அபிநயா, நிதுசா, செழியன், இந்துஜன், சமீலா உள்பட 25 நார்வே தமிழர்கள் நடித்துள்ளனர்.


இதுபற்றி வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: நார்வேயில் சினிமா ஒரு கலையோ, தொழிலோ அல்ல இருந்தாலும் புலம் பெயர்ந்த தழிழர்களின் கலை ஆர்வத்தை பிரதிபலிப்பதற்காக இதனை தயாரித்துள்ளேன். பணி நேரம் போக மீதி நேரத்தில் யாருமே எந்த சம்பளமும் பெறாமல் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார்கள். இது ஒரு புதிய முயற்சியாகும். எங்கள் உழைப்பை, திறமையை காட்ட இதனை தமிழ்நாட்டில் திரையிடவும் உத்தேசித்துள்ளோம் என்கிறார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template