அமெரிக்காவில் எபோலா பரவலைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில்,
நியூயார்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையம், வாஷிங்டனுக்கு வெளியில் அமைந்துள்ள டலஸ் விமான நிலையம், சிகாகோவிலுள்ள ஓஹேர் விமான நிலையம், அட்லாண்டாவிலுள்ள ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்ஸன் விமான நிலையம், நியூஜெர்ஸி மாகாணத்திலுள்ள நூயர்க் நகர விமான நிலையம் ஆகிய 5 விமான நிலையங்களில் பரிசோதனை முறைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது என்றார்.
அமெரிக்காவிலும் பரிசோதனை முறைகள்:
எபோலா நோயைக் கண்டறிவதற்கான அதிநவீன பரிசோதனை முறைகளை, அந்நோய் பரவியுள்ள நாடுகளில் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்தோம்.இனி அமெரிக்காவிலும், அந்தப் பரிசோதனை முறைகள் பயன்படுத்தப்படும்.

எபோலா அறிகுறியுள்ள நபரை, விமானத்தில் ஏற்றாமல் தடுத்து நிறுத்துவதே, அந்நோய் வேறு நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறையாகும் என்றார் அவர்.
எபோலாவை தவிர்க்க முடியாத ஐரோப்பிய நாடுகள்:
ஐரோப்பிய நாடுகளில்,எபோலா நோய் கண்டறியப்படுவது தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.எனினும், அந்த நாடுகளில் எபோலா வேகமாகப் பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

90 சதவீத மக்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இங்கு வருவதாகவும் எபோலா வைரசால் தாக்கப்பட்டிருந்த 6,700 பேரில், 3,400 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.jpg)
.jpg)

.jpg)

Post a Comment