வவுனியா நகரமே ஆர்ப்பாட்டத்தினால் பரபரப்பு ,photo

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


இதன்போது அங்கு கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி வாய்க்கு கறுப்புத் துணி கட்டி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இதில் போடாதே போடாதே பொய்வழக்குப் போடாதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எமது வாழ்வு எமது கையில் அந்நியர்க்கிங்கு இடமில்லை, விடுதலை விடுதலை எங்கள் தாயை விடுதலை செய், சரணடைந்தவர்கள் என்ன பலி ஆடுகளா காணாமல் போகச் செய்வதற்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


அத்துடன் நேற்று வவுனியா பிரஜை குழு தலைவர் இராணுவமுகாம் பகுதிக்கு அருகாமையில் வைத்து தாக்கப் பட்டார்.
இதனால் இன்று ஆர்ப்பாட்டம் பரபரப்பானதாக காணப்பட்டது.


எங்குபார்த்தாலும் பொலிசார் ராணுவம் என வனுனியா நகரே பதட்டமான சூழ் நிலையில் உள்ளதாக எமது வவுனியா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


இதனை தடுக்க இலங்கை ராணுவம் மே ட் கொண்ட சதி முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template