தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை ராணுவம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, மீன் பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும், படகுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், படகு ஒன்றிற்கு முப்பதாயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template