மட்டக்களப்பில் தாய்ப்பால் புரக்கேறி குழந்தை மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மாங்கேணி பாம் கொலனியில் பிறந்து 03 நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 17ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் இந்த சிசு பிறந்தது. சுகப்பிரசவத்தின் பின்னர் தாயும் சிசுவுமாக வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு சென்றனர்.

தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த சிசு திடீரென்று வீரிட்டுக் கத்தியதுடன் மயக்கமடைந்தது. உடனடியாக சிசுவை வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது வட்டவான் பகுதியில் முச்சக்கரவண்டி பழுதடைந்தது.

இந்நிலையில் முச்சக்கரவண்டியை திருத்திக்கொண்டு வைத்தியசாலையில் சிசுவை அனுமதித்தபோது சிசு உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறினர்.

உயிரிழந்தது தனது முதலாவது குழந்தை என்பதால் தாய் ரீ.ரூபாஜினி செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template