சப்ரகமுவ மாணவர்களுக்கு ஆதரவாக பேராதனை, ருகுணு மாணவர்கள் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (11) கலஹா சந்தியில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வாகனங்களை மாற்று வீதிகளில் பயணிக்க வைக்க பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template