யாழ்ப்பாணம் கொடிகாமப்பகுதியில் நேற்று விபத்து இடம்பெற்றுள்ளது, வாகன ஓட்டுனர் தொலைபேசி பேசிக்கொண்டு வாகனத்தி னை ஓடியமையினால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கூலர் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ஹன்டர் வாகனத்தை மோதியதில் அதில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை கொடிகாமம் அ.த.க.பாடசாலைக்கு முன்பாக ஏ 9 வீதியில் இடம்பெற்றது.
தொண்டமானாறு சின்னமலையைச் சேர்ந்த இளையதம்பி பாலகுரு (வயது – 65) கரவெட்டி கரணவாய் தெற்க அண்ணா சிலையடியைச் சேர்ந்த மாணிக்கம் மாசிலாமணி (வயது- 57) ஆகிய இருவருமே காயமடைந்தவர்களாவர்.
காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment