மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் அமெரிக்காவுக்கு சென்ற இடத்தில் எபோலா காய்ச்சலுக்கு லைபீரியர் ஒருவர் பலியானார். எபோலா மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்ற நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று எபோலா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி அதன் பிறகு மேற்கத்திய நாடுகளில் அவர்கள் அதை பரப்ப திட்டமிட்டுள்ளதாக இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹம் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு துறையின் தலைவர் அந்தோணி கிளீஸ் கூறுகையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் எபோலா வைரஸை தங்கள் நாச வேலைக்கு பயன்படுத்தக்கூடும்.
தீவிரவாதிகள் தற்கொலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதனால் வைரஸ் தாக்கம் உள்ளவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி மனித வெடிகுண்டாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்தலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment