ஜனாதிபதி பயணம் செய்யும் இடங்கள் அனைத்திலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வீதிச் சோதனை நடவடிக்கையும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது.
குறிப்பாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் குறித்த சில தூரங்களுக்கு ஒவ்வொரு இராணுவத்தினராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்களதும் ,வியாபார நிலைய உரிமையாளர்களின் விபரங்களையும் படையினர் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கான ரயிலில் பயணம் செய்து உத்தியோக பூர்வமாக ரயில் சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில் ரயில் பாதைகளிலும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் ஜனாதிபதியின் வருகையினை ஒட்டி பல்வேறு புனரமைப்பு வேலைகள் மிகத் துரித கதியில் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி பங்கேற்கவுள்ள இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் துரிதமாக துப்பரவு செய்யப்பட்டு அழகு படுத்தும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நாவற்குழி பிரதேசத்தில் இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் பூ மரக்கன்றுகளை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள வீரசிங்கம் மண்டபத்தினையும் இராணுவத்தினர் இரவு பகலாக அழகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




.jpg)
.jpg)

.jpg)






Post a Comment