அம்மாவுக்கு 19ஆம் திகதி ஜாமீன் நிச்சயம் கிடைச்சுடும் அப்புறம் அவங்களை யாரும் அசைக்க முடியாது. அவங்க திரும்ப வந்து நாடாளுவாங்க என்று கூறி பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஒரு ஜோதிடர்.சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்கரில் உள்ள பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி முதல் இந்த சிறை வளாகத்தினை கோயில் போலவே மாற்றி வருகின்றனர் அ.தி.மு.க வினர். மொட்டை அடிப்பதும், தேங்காய் உடைப்பதும், சிறை வளாகத்திலேயே அங்கப் பிரதட்சணம் செய்வதும் என அமர்களப்படுத்தி வருகின்றனர் அ.தி.மு.க வினர்.
இந் நிலையில் பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு வெளியே ஜோதிடர் ஒருவர் சுற்றி வருகிறார். அவர் பெயர் நாகராஜாம். அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.05.2011 அன்று பதவியேற்றதுதான்
அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால் தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது என்று கூறி வருகிறார். இதை அவருக்கு ஏற்கெனவே ‘பக்ஸ்\' மூலம் அனுப்பினேன் என்று கூறி அந்த பேப்பர்களை கைகளில் ஆதாரமாக வைத்துக்கொண்டுள்ளார்.
வரும் 19ஆம் திகதிக்கு மேல் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பை விட வேகமாக செயல்படுவார். மீண்டும் நாடாளுவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அம்மாவுக்கே ஜோதிடம் சொல்வதால், அவரைச் சுற்றி அ.தி.மு.க. வினர் கூடி நின்று அவரது ஜோதிடத்தை ஆர்வத்துடன் கேட்கின்றனர். இதனால் ஜோதிடரைச் சுற்றி எப்போதும் பரபரப்பாக கூட்டம் இருக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)

.jpg)






Post a Comment