வவுனியா வைரவபுளியங்குளத்தில் மதுபோதையில் நின்ற இளைஞர் மீது மற்றொரு இளைஞர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் பலத்த காயத்திற்குள்ளான இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா வைரவ புளியங்குளம் வைரவ கோவில் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் மதுபோதையில் நின்ற இளைஞர் மீது மற்றொரு இளைஞர் தாக்குதலை மேற்கொண்டார்
. இதனால் முகம் மற்றும் கை என்பவற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஏனைய இளைஞர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அண்மைக்காலமாக வைரவபுளியங்குளம் பகுதியில் வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வீதியில் கூடி தகாத வார்த்தைகளை பிரயோகித்து சண்டையிடுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment