சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் உள்ள இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது

இரத்தினபுரி கொடகவெல ரன்வெல பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலுள்ள இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுமிகளும் கடந்த இரண்டாம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒரு சிறுமியுடன் 28 வயதான திருமணம் முடித்த சந்தேகநபர் ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஏனைய சிறுமியும் சந்தேகநபரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு சிறுமிகளும் கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையக்கு மாற்றப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template