ஆண்கள் முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி…

முகப்பருக்கள், ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைதான். முகப்பருக்கள் முகம், மார்பு, தோள், முதுகு போன்ற இடங்களில் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவில் செயல்படுவதால் உருவாகின்றன. பொதுவாக இளவயதினருக்கு அதிகம் வரும் இந்த பிரச்சனை, அனைத்து வயதினருக்கும் வரக்கூடியது தான்.

பெண்களேடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு அதிக வியர்வை வெளியேறும். இதனால் ஆண்களுக்கு முதுகு, தோள், கழுத்து போன்ற இடங்களிலும் பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். ஷேவிங் செய்வதும் ஆண்களின் முகப்பருக்களுக்கு ஒரு காரணம். எந்த ஒரு விஷயத்தையும் வரும் முன் காப்பதே சிறந்தது.

எனவே ஆண்களுக்கு ஏற்படும் பருக்களை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி பார்க்கலாம். தினம் இருமுறையாவது முகம் கழுவுங்கள்: நளொன்றிற்க்கு இரு முறையாவது உங்கள் முகங்களை சோப்பு அல்லது லேசான எண்ணெயற்ற ஃபேஸ் வாஷ் கிரீம்களை கொண்டு கழுவ வேண்டும். அடிக்கடி முகம் கழுவுவதால், முகத்தில் பருக்கள் உருவாவதற்க்கு காரணமான அதிக படியான எண்ணெய்ப்பசை குறைவதுடன், இறந்த செல்களும் அகன்றுவிடும்.

அடுத்ததாக முடியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தினமும் தலைமுடியை கழுவிட வேண்டும். நம்மில் பலர், முடி சிறியதாக உள்ளதால், அடிக்கடி பராமரிக்க தேவையில்லை என்ற முடிவிற்க்கு வந்து விடுகிறோம். நம் உடலில் மிக எளிதில் அதிக அளவு அழுக்கு படியும் பாகம் முடி தான்.

உண்மையில் முடியின் அளவு எப்படியிருப்பினும், முடியிலிருந்து முகம், கழுத்து போன்ற இடங்களுக்கு தூசி, அழுக்கு, வியர்வை போன்றவை எளிதாக இறங்கும். வெயிற்காலங்களில், வியர்வையை கட்டுபடுத்த குறைவான அளவு முடியை பராமரிப்பது நன்று. தொடர்ந்து உடற்பயிற்ச்சி செய்வதும், பருக்களை குறைக்க உதவும்.

உடற்பயிற்ச்சி செய்வதால், மனாழுத்தம் குறைவடையும். அதோடு, இரத்த ஓட்டம் சீரடைவதுடன், இரத்ததில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்கும். இது எண்ணெய் சுரப்பிகளின் மிதமிஞ்சிய செயல்பாட்டை கட்டுபடுத்த உதவும். பிளேட்களை கொண்டு ஷேவ் செய்வதை விட, மின்சார ஷேவர் அல்லது மின்சார ட்ரிம்மர்களை பயன்படுத்தலாம்.

பிளேட்களால் ஷேவ் செய்யும் போது, கண்களுக்கு புலப்படாத அளவு மிக சிறிய அளவில் சருமத்தின் மேற்புறம் வெட்டுக்கள் மற்றும் சிறாய்ப்புகள் ஏற்படுகின்றன. இதனால் தான் ஷேவிங் செய்ததும் காயங்கள் எதுவும் இன்றியும் எரிச்சல் உணர்வும் சில நேரங்களில் லேசான வீக்கங்களும் ஏற்படுகின்றன.

பிளேடால் ஷேவ் செய்தால், மிகவும் லெச்சன கெமிக்கல்கள் அதிகம் இல்லாத ஏஃப்டர் ஷவர், ஃபோம் அல்லது ஷேவிங் கிரீமை பயண்படுத்தலாம். மிகவும் இருக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. அதிக இருக்கமாக ஆடை அணிவதால், உடலில் புழுக்கம் ஏற்பட்டு, அதிக படியான வியர்வையை உற்பத்தி செய்கிறது.

இதன் விளைவாக முகத்திலும் வியர்வை அதிகரிக்கிறது. மேலும், இருக்கமான ஆடைகள், வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை வெளியேற விடாமல் தடுத்து, அரிப்பு எரிச்சல் போன்ற பிற சரும பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. உடற்பயிற்ச்சிக்கு பின், விளையாடிய பின், அதிக உடல் உழைப்பு ஏற்படுத்தும் வேலைகள் செய்ததற்க்கு பின் தவறாமல் குளிக்க வேண்டும்.

வியர்வையாலும், உங்கள் சுற்றுபுறத்திலிருந்தும் பாக்டீரியாக்கள் மற்றும் தூசு போன்றவை உங்கள் உடலில் தங்கிவிட்டால் அது பருக்கள, மற்றும் பிற சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். முக்கியமாக, பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிக அளவு வியர்வை வெளிப்படும். அடிக்கடி முகத்தை தொடுவது கூடாது.

இவ்வாறு செய்வதனால், கையில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் முகத்தில் பரவி எளிதாக பருக்கள் வர காரணமாகிறது. உடற்பயிற்ச்சியாளர்கள், தங்கள் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்டெராய்டுகளை பயண்படுத்துவது வழக்கம். இதனாலும் முகத்தில் பருக்கள் வரும் வாய்ப்புள்ளது. ஸ்டெராய்டுகளிலுள்ள சில வேதிபொருட்கள் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டையும் ஊக்குவிப்பதே இதற்கு காரணமாகும்.

பருக்கள் மற்றும் முக சம்பந்தமான பிரச்சனைகள் அதிக பட்சம் இரண்டு வாரங்களில் தானாகவே சரி ஆகிவிடும். அவ்வாறு ஆகாது இருந்தாலோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் பட்சத்திலே தோல் நிபுணரின் உதவியை நாடுவது அவசியமாகும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template