ஜெயா. வுக்காக தற்கொலை முயற்சி செய்த நடிகை...!

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க,வினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர்.,ன், ''அமரகாவியம்'', ரஜினி நடித்த ''கர்ஜனை'' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள மாயா என்ற பிரபல தமிழ் நடிகை, இன்று மதியம் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மண்ணெணெயுடன் அலுவலகத்துள் வந்துள்ளார். இதனை கண்ட பெண் காவலர் ஒருவர் அவரை தடுக்க முற்பட்டும், இவர் விரைந்து சென்று அலுவலக வளாகத்தில் தன் மீது மண்ணெணெயை ஊற்ற்க்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதற்குள்ளாக போலீசார் கூடி அவரை தடுத்துவிட்டனர்.

இதன் பின் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டியே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார். தீக்குளிப்பு முயற்ச்சி தடைபடவே, அம்மா வாழ்க என்று கூறியபடி ரோட்டில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

கமிஷ்னர் அலுவலகம் முன் படுத்து புரண்டு ஆர்பாட்டம் செய்த மாயா மற்றும் அவருடன் இருந்த மற்றொரு பெண் இருவரையும் காவலர்கள் அப்புறப்படுத்தினர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template