தரையிலும் வானிலும் பயணிக்கக் கூடிய அதி நவீன பறக்கும் கார்

ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த ஏரோமோபில் நிறுவனமான தரையிலும் வானிலும் பயணிக்கக் கூடிய அதி நவீன பறக்கும் காரை உருவாக்கியுள்ளது.

மேற்படி, ஏரோமோபில் 3 (aeromobil 3) காரானது வீதி நெரிசலை தவிர்க்க பயனுறுதிப்பாடு மிக்க பறக்கும் காரை உருவாக்குவது தொடர்பான விஞ்ஞானக் கனவை பூர்த்தி செய்யக்கூடியதாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கார் ஒரு தாங்கிப் பெற்றோலில் 430 மைல் தூரம் பயணிக்க கூடியதாகும். இந்தக்காரை சாதாரண வாகன தரிப்பிடத்தில் நிறுத்த முடிவதுடன் இதற்கான எரிபொருளை வழமையான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கார் தரையில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும் வானில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கக் கூடியதாகும். இந்த அதி நவீன வடிவமைப்பிலான பறக்கும் கார் எதிர்வரும் 29 ஆம் தேதி ஆஷ்திரியாவில் (Austria) இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகளுக்கான கண்காட்சியில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template