வட மேற்கு சிரியாவில் ரோமன் கத்தோலிக்க மதகுருவும் அவரது உதவியாளர்கள் 20 பேரும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் - நுஷ்ராக் புரொன்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
அருட்தந்தை ஹன்னா ஜல்லோப் அங்கிருந்த மடமொன்றிலிருந்து கடத்தப்பட்டுள்ளார். அச்சமயம் மடத்திற்குள் இருந்த கன்னியாஸ்திரிகள் அருகிலிருந்த வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு சிரியாவில் மக்கள் எழுச்சி ஆரம்பமானது முதற்கொண்டு சிரியாவில் ஒரு தொகை கன்னியாஸ்திரிகள் துறவிகள் மற்றும் மதகுருக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
சிரியா நாட்டவரான அருட்தந்தை ஹன்னா இட்லிப் மாகாணத்தில் கனயெஹ் நகரிலுள்ள சென். ஜோசப் கிறிஸ்தவ மடத்தில் கடந்த 12 வருடங்களாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment