நடிகர், நடிகைகளின் காதல், கல்யாண வாழ்க்கைகள் பற்றி நாம் அறியாதது இல்லை. திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுகிறார்கள். இது மலையாள திரையுலகம் தான் இந்த விஷயத்தில் அதிக வேகம் காட்டுகிறார்கள். இதில் புதிதாக இணைந்துள்ளார் நடிகை பாவனா.
நடிக்க வந்த புதிதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நல்ல பிள்ளையாக இருந்த பாவனா, ‘ஹங்கிரி பேபிஸ் இன் லவ்’ என்ற மலையாள படத்தில் நடித்த போது அனுப் மேனனுடன் காதல் வயப்பட்டுள்ளார். மலையாளத்தில் பாவனாவின் சினிமா கேரியர் டவுனாகி விடவே தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மற்ற மொழிப்படங்களில் நடித்து வந்தவர், மீண்டும் தாய்மொழியான மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.
அப்படி கவனம் செலுத்திய போதுதான், நடிகர், திரைக்கதை, பாடல் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருந்த அனுப் மேனனை நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் உருகி உருகி காதலித்திருக்கிறார். அனுப் மேனனும் பாவனாவை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றி பொழுதைப் போக்கியிருக்கிறார். அனுப் மேனனை திருமணம் செய்துகொண்டு குடும்ப ஸ்திரியாகி விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் பாவனா. ஆனால், அனுப் மேனனோ திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறி பாவனாவின் காதலுக்கு பைபை சொல்லி விட்டார்.
காதல் தோல்வியைத் தாங்க முடியாத பாவனா மன உளைச்சல் தாங்க முடியாமல் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment