IS-ILக்கு எதிரான வான் தாக்குதல்: கனடாவும் இணைந்தது …

ஈராக்கிலுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில் கனடா இணைந்துகொள்வதற்கு அங்கீகாரமளித்து கனேடிய பாராளுமன்றம் வாக்களித்துள்ளது.

இதன் பிரகாரம் கனடா சி.எப்-18 விமானங்கள் ஆறுடன் கண்காணிப்பும் மற்றும் எரிபொருள் மீள்விநியோக விமானங்களையும் 600 உத்தியோகத்தர்களையும் வழங்கியுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான கூட்டமைப்பில் இணைந்து கொண்ட நாடுகளின் வரிசையில் தற்போது கனடாவும் இடம்பிடித்துள்ளது.

கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பாரால் முன்வைக்கப்பட்ட மேற்படி திட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் 134 க்கு 157 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் பழைமை வாதக்கட்சியை சேர்ந்தவரான ஹார்பர் விபரிக்கையில் இந்த தீவிரவாத அமைப்பை பரிசோதனைக்குட்படுத்தாமல் விட்டால் அது மிக வேகமாக வளர்ந்துவிடும்.

அவர்கள் ஏற்கனவே தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாத நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதுடன் முக்கிய தாக்குதல் இலக்குகளின் ஒன்றாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். ஏற்கனவே ஈராக்கில் 24க்கு மேற்பட்ட கனேடிய இராணுவ ஆலோசகர்கள் உள்ளனர். எனினும் தரைப்படையினர் எவரையும் நியமிக்கும் திட்டம் குறித்து அவர் நிராகரித்துள்ளார்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில் ஆஸ்ரேலியா ஏற்கனவே இதையொத்த வாக்குறுதியை அளித்துள்ளது. மேற்படி, கூட்டமைப்பில் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளடங்கலான ஐரோப்பிய நாடுகளும் ஜோர்தான் சவூதி அரேபியா உள்ளடங்கலான வளைகுடா நாடுகளும் இணைந்துள்ளன.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template