பூஜை படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று

தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி கூட்டணி சேர்ந்துள்ள படம் பூஜை. இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். 

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது. 

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே வரிவிலக்கு பெற இயலும், ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பூஜை படக்குழுவினர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template