இந்திய அளவில் இப்போது ஸ்ருதிஹாசன்தான் செம ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தி, தெலுங்கு சினிமாக்களில் உள்ள கவர்ச்சி நடிகைகளே ஸ்ருதிஹாசன் வருகிறார் என்றால் ஒதுங்கி நிற்கும் அளவுக்கு அவர்களையெல்லாம ஓவர் டேக் செய்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார் ஸ்ருதி..
இந்த நிலையில், தற்போது பூஜை படத்தில் நடித்திருப்பவர், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோது பாதியில்தான் வந்து கலந்து கொண்டார். ஆனால், ஒரு மரியாதைக்காககூட தாமதமாக வந்ததற்கு சாரி கேட்டுக்கொள்ளவில்லை அவர்.
அதையடுத்து அவரை நோக்கி கவர்ச்சி சம்பந்தமான கேள்விகள் பறந்தபோது, நடிகை என்று வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. கதைக்கு ஏற்ப தேவையான கிளாமரை காண்பித்து நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும். இருப்பினும் நான் ஒரு அளவுகோல் வைத்துதான் நடித்து வருகிறேன் என்றார்.
அதையடுத்து, திருமணத்துக்கு முன்பே நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக செய்தி வெளியானதே? என்று கேட்போது, அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லீங்க. நீங்க வேற இப்படியெல்லாம்கேட்டு என்னை டென்சன் பண்ணாதீங்க என்று அந்த கேள்விக்கான பதிலை அத்தோடு கட் பண்ணிக்கொண்டார் ஸ்ருதிஹாசன்

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment