தனது பெற்ற மகளையே கா்ப்பமாக்கிய தந்தை - வவுனியாவில் சம்பவம்

பல மாதங்களாக பெற்ற தகப்பனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கா்ப்பமாகியுள்ளாள்  15 வயதுச் சிறுமி. இச் சம்பவம் வவுனியாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி பாடசாலைக்கு சென்ற போது சிறுமிக்கு இரத்தப் போக்கு இடம்பெற்றதால் இது தொடா்பாக பாடசாலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் போதே சிறுமி கா்ப்பமாக இருப்பதும் இக் கா்ப்பத்திற்கு சிறுதியின் தந்தையே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காச் சென்றுள்ளதால் சிறுமியின்  தந்தையே சிறுமியையும் சிறுமியின் ஏனைய மூன்று சகோதரங்களையும் தனது பொறுப்பில் வைத்திருந்துள்ளார்.

சிறுமி மீது தந்தை வல்லுறவு மேற்கொள்வதற்கு சிறுமி இணங்கா விட்டால் சிறுதியின் சகோதரனான 4 வயது மகனை தந்தை கடுமையான முறையில் தாக்கி வந்ததாகவும் இதனாலேயே தான் இவ்வாறு பயந்து பாலியல்வல்லுறவு பற்றி யாருக்கும் முறையிடவில்லை எனவும் சிறுமி பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொடிய காம வல்லூறுகளை நம்பி பிள்ளைகளை  விட்டு விட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களுக்கு இது சமா்ப்பணம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template