இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல்

தேசிய அடையாள அட்டை வழங்குதற்கான நடமாடும் சேவை, இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


தேசிய அடையாள அட்டை வழங்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் சட்ட ஒழுங்குகள் தொடர்பான பல விடயங்கள் இதன் போது ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமாரவினால் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

16 வயது பூர்த்தியடைந்த சகல இலங்கைப்பிரஜைகளும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க தகைமையுடையவர் ஆவர் என்பதுடன் குறிப்பாக விண்ணப்பிக்கும் போது தனது பெயர், பிறந்த திகதி, பிறந்த இடம், முகவரி ஆகிய விடயங்களை சரியாக வழங்குவது இன்றியமையாதது என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் விளக்கமளிக்கையில், ஒரு நாளைக்கு தமது திணைக்களம் கூடிய பட்சம் 4000 அடையாள அட்டைகளை விநியோகிப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரிகள் வழங்குகின்ற தகவல்கள் பூரணமின்மையினால் காலதாமதங்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.

சரியான தகவல்களை வழங்கி தாம் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்து ஒரு மாதத்திற்குள் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையாயின் பெயர்,பிரதேச செயலாளர் பிரிவு, பாடசாலையின் பெயர், விண்ணப்ப இலக்கம், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஆகியவற்றுடன் 0112555616 என்ற இலக்கத்துடன் தொடர்கொண்டு குறித்த தகவல்களை 0112506458 என்ற இலக்கத்திற்கு பெக்ஸ் அனுப்பமாறும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

திருகோணமலை மாவட்டதின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் எதிர்வரும் மாதம் ஆட்பதிவு திணைக்களத்ன் நடமாடும் சேவை இலவசமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நவம்பர் மாதம் 15ம் திகதி திருகோணமலை பட்டனமும் சூழலும், 16 கந்தளாய், 17 மொரவௌ, 18 கோமரன்கடவெல, 20 சேருவல, 21 வெருகல், 22 தம்பலகாமம், 23 மூதூர், 24 பதவி ஸ்ரீபுர, 25,27 குச்சவெளி, 28, 29 கிண்ணியா ஆகிய பிரதேச செயலகங்களில் நடமாடும் சேவை நடைபெறும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template