வடக்கில் 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:50 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்துக்கு வருகை தந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை முதலே யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து விசேட பஸ்களில் மக்கள் மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பந்தல்கள், கதிரைகள் போதாமையால் அவற்றுக்கு வெளியேயும் நீண்டநேரமாக வெயிலில் காயவேண்டிய நிலை ஏற்பட்டது. முன்னதாக கிளிநொச்சியை வந்தடைந்த ஜனாதிபதி மஹிந்த இரணைமடு பகுதியில் போர் கால பாதிப்புக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மத்திய கல்லூரி மைதானத்துக்கு வந்தடைந்தார். தற்போது அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment