ரஜனியை அரசியலுக்குள் இழுக்கும் மோடி

நடிகர் ரஜனியை பாரதீய ஜனதா கட்சிக்கு கொண்டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். ஐதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜனியிடம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்றமுக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜனி அரசியலுக்கு வரவேண்டும். இதேவேளை அவர் பா.ஜ.கவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்புவிடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜனி வீட்டுக்கு சென்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன், ரஜனியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

 இதைத் தொடர்ந்து ரஜனி பா.ஜ.கவில் சேர்வாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது லிங்கா படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் இருக்கும் ரஜனியுடன் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து ஏற்கனவே அமித்ஷா 3 முறை ரஜனிகாந்திடம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும் ரஜனி, தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. காலம் கனியட்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார்.

எப்படியும் நீங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ரஜினியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரஜனியும்,  படப்பிடிப்பு முடியட்டும். உறுதியான பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template