நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12) அதிகளவிலான மழைக்கு சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வானிலையில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தினால் ஹ{ட்ஹ{ட் புயலின் தாக்கம் குறிப்பாக வடமாகாணத்தில் செல்வாக்கு செலுத்தலாம்.
காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியமும் காணப்படலாம் எனவும், குறிப்பாக இம்மழைவீழ்ச்சியின் அளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம். அதிலும் மேல் சப்ரகமுவ மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிகளவிலான சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காலி மாத்தறை மாவட்டங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் நிலவும். மேலும் பல பிரதேசங்களில் காற்று வீசலாம் எனவும் குறிப்பாக மலையகங்களில் காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படலாம். இக்காற்றின் வேகம் 60 கிலோ மீற்றரைத் தாண்டலாம். மேலும் நாட்டின் வடக்கு பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு வடகிழக்கு கிழக்கு பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 - 80 கிலோ மீற்றரளவில் இருக்கலாம் என வானிலை அவதான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழை காணப்படும்.யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 28 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 27 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மழைக்கான சாத்தியம் சிறிதளவில் காணப்படும். கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக திருகோணமலை பிரதேசத்தில யாழ் மாவட்டத்தில் 34.6 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 12.9 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment