இணையதளங்களில் கருத்து சுதந்திரம் உள்ளதாகவும். மக்கள் தங்கள் கருத்துகளை மிக எளிதாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தான் இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் அரசியல், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்வுபூர்வமான செய்திகளில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில்லை.
சமூக ஊடகமாக பயன்பட கூடிய சமூக வலைதளங்களும் மெளன சாமியார்கள் நிறைந்ததாகவே காணப்படுவதாக அமெரிக்காவில் எடுக்கபட்ட ஒரு பல்கலைகழக ஆய்வு கூறுகிறது.
அமெரிக்க அரசியல் சூழல் பற்றி இங்கு அதிக அளவில் பேசப்படவில்லை என்பது இதில் மிக அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. தன் வீட்டில், வேலை செய்யும் இடத்தில் பேசும் அளவிற்க்கு கூட சமுக வலைதளங்களில் அரசியல் பேசப்படுவதில்லை எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 180க்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்தனர். இது முழுவதும் ஒரு பிரச்சனையை அடிப்படையாக கொண்டது இதனால் இது சரியான முடிவு என்று எடுத்துகொள்ளவும் முடியாது, எனவும் சொல்கிறார்கள். பல்வேறு சமுக காரணங்களுக்காக சமுக வலைதளங்கள் பயன்படுத்தபட்டு இருப்பது கடந்த கால செய்தியாக இருக்கிறது.
ஃபேஸ் புக் டிவிட்டர் போன்றவை பல்வேறு நிலைகளில் தனி மனிதர்கள் தங்களை வெளிபடுத்தி கொள்ள தக்கதாகத்தான் இருக்கிறது. ஆனால் பயன்படுத்துபவர்கள் தங்கள் கருத்துகளை வெளிபடுத்த தயாரக இருக்கிறார்களா? என்பதே இதில் முக்கிய கேள்வியாகும்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (NSA) இணைய பயன்பாட்டாளர்களின் முழுத்தகவல்களையும் திரட்டுவதால் நாம் அரசிற்க்கு எதிராக பதியும் தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபடுமோ? என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த நிலை இருப்பதாக சொல்லபடுகிறது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment