கொபானியில் மக்களை கடும் சித்ரவதை செய்யும் ஐஎஸ்: ஐநா தகவல்!

சிரியாவின் கொபானி நகரை கைப்பற்றி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் மத அடிப்படைவாத அமைப்பு அங்குள்ள குருது இன மக்களை கடும் சித்ரவதைக்கு ஆளாக்குவதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் குழுவினரிடம் இருந்து தப்பித்து ஐநா முகாம்களில் தங்கியுள்ள குருது இன மக்கள், அவர்களின் அட்டூழியத்தை பதிவு செய்ததாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொபானியில் இருந்த பலரை ஐஎஸ் அமைப்பினர் பிணைக் கைதியாக கொண்டு சென்று தலையை துண்டித்து கொலை செய்ததாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்களின் சட்ட திட்டங்களை பின்பற்றாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கொபானி நகர் முழுவதும் ஐஎஸ் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், அங்கு இனப் படுகொலை நிகழும் அபாயம் இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template