உருக்குலைந்த நிலையில் புதருக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கடற்கரையோர புதருக்குள் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையோர புதர்களுக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதாக தெரிவித்தனர்.

சல்வார் அணிந்த நிலையில் காணப்படும் இந்தப் பெண்ணின் சடலம் சுமார் 30 வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் கூறினர்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template