ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் யாழ் விஐயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தகைய பாதுகாப்பு பணிகளிலில் தமிழ்ப் பொலிஸார் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ம், 13ம் திகதி ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு, யாழ்.தேவி புகையிரத சேவையை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல திட்டங்களை ஆரம்பித்து வைப்பதுடன் பல இடங்களிற்கும் செல்லவுள்ளார்.
இதன்போது பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் இருக்கின்றார்.
இதற்காக ஐனாதிபதி செல்லவுள்ள வீதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலுள்ள இடங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் என்பனவற்றின் பாதுகாப்புக்கள் தற்போதே அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
ஐனாதிபதியின் இந்த விஐயம் தொடர்பிலும் இதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் பொலிஸ் நிலையத்தில் உயர் மட்டக் கலந்துரையாடலொன்று சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஐனாதிபதிக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ் சிங்களப் பொலிஸார் என்ற பாகுபாடும் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அதாவது ஐனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தனியே சிங்களப் பொலிஸாரை மட்டுமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவதென்றும் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளுக்கு வெளியே தமிழ்ப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொலிஸ் கடமையில் ஈடுபட்டுள்ள தமிழ்ப் பொலிஸார் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போன்று இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கவலையுடன் தமிழ்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கிற்கு வருகை தருகின்ற ஐனாதிபதியின் பாதுகாப்புப் பணிகளள் பலப்படுத்தப்பட்டு இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதே வேளையில், இத்தகைய உள்ளகப் பாதுகாப்புப் பணிகளில் தமிழ்ப் பொலிஸார் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றதாகவும் தெரிய வருகின்றது.
ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கூட்டமைப்பு கலந்து கொள்ளுமா?
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 12ம், 13ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ள நிலையில், ஜனாதிபதி பங்குகொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இறுதி முடிவு எதனையும் இன்னமும் எடுக்கவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஜனாதிபதி வருகையினை புறக்கணிப்பதா, இல்லையா? என்பது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் பேசப்பட்டிருந்தது.
எனினும் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் இறுதி முடிவு எதிர்வரும் நேற்று வெளியிடப்படும் என நம்பப்பட்டது. எனினும் அவ்வாறான உத்தியோகபூர்வ முடிவுகள் எவையும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் விடயம் தொடர்பாக கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிடுகையில்,
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள தலைவர்கள் கலந்து கொள்ளும் வடக்கின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்வர். ஆனால் ஜனாதிபதியின் மற்றய நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் பெரும்பாலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றே நம்பப்படுகின்றது.
எனினும் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்கள் அல்லது கூட்டங்கள் நடைபெற்றதாக இல்லை என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment