யாழ். போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேர் பலியாகினர்.
அதில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் பலியாகினர். அவர்களின் நினைவுதினமே இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







.jpg)
.jpg)

.jpg)






Post a Comment