டயலொக் சம்பியன் லீக் காற்பந்தாட்டப் போட்டி

டயலொக் சம்பியன் லீக் காற்பந்தாட்டப் போட்டி விபரங்களை இலங்கை காற்பந்து சம்மேளம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி திகாரிய இளைஞர் அணிக்கும் நந்தமித்ரா அணிக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


அன்றைய தினம் களுத்தறை பார்க் அணிக்கும் கிரிஸ்டல் பௌஸ் அணிக்கும் இடையிலான போட்டி வெர்னோன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கிலும் ஜாவா லேன் மற்றும் இலங்கை விமானப்படை அணிக்கும் இடையிலான போட்டி சிட்டி காற்பந்தாட்டத் தொகுதியிலும் மாத்தறை சிட்டி அணிக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான போட்டி மாத்தறை விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளது.


எதிர்வரும் 19ஆம் திகதி நீர்கொழும்பு இளைஞர் அணிக்கும் சுப்பர் சன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் மாலை 5.00 மணிக்க நடைபெறவுள்ளது.


அன்றைய தினம் இலங்கை பொலிஸ் அணிக்கும் கிரிஸ்டல் பௌஸ் அணிக்கும் இடையிலான போட்டி பொலிஸ் மைதானத்திலும் நியு யங் மற்றும் டொன் பொஸ்கோ அணிக்கும் இடையிலான போட்டி சென் அல்பர்ட் எஸ் பீரிஸ் மைதானத்திலும் ப்ளூ ஸ்டார் அணிக்கும் இலங்கை இராணுவ அணிக்கும் இடையிலான போட்டி வெர்னோன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கிலும் பெலிஸ்கன் மற்றும் அப்கன்றி லயன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி புனித அன்னம்மாள் கல்லூரி மைதானத்திலும் ரினௌன் மற்றும் சொலிட் அணிகளுக்கிடையிலான போட்டி மாலை 3.00 மணிக்கு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template