தர்மபுரம் நெத்தலி ஆற்றங்கரையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி-தர்மபுரம் நெத்தலி ஆற்றங்கரையில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் 52 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்களால் தர்மபுரம் பொலிஸா ருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசா லைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலையில் சேர்ந்த லூகா (வயது-52) எனவும் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தங்கியிருந்து கூலித் தொழில் செய்து வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template