தல அஜித் தற்போது கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்றும் அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர் என்றும் நமக்கு தெரியும். தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ரொம்ப விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
நேற்று இப்படத்தின் சில போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் கவர்ந்தது. அஜித்தின் நியூ லுக் தங்களை வெகுவாக கவர்ந்ததாக தயாநிதி அழகிரி, சாந்தனு, பாபி சிம்ஹா, நீது சந்திரா போன்ற பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுவரை இப்படத்தின் மூன்று கெட்டப் வெளிவந்துள்ளது, இன்னும் ஒரு கெட்டப் படக்குழுவால் ரகசியம் காத்து வரப்படுகிறது என்று கூறப்படுகிறது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment