மலேசிய தலைநகர் கோலாலப்பூரில் வியாழக்கிழமை இடம் பெற்ற குண்டு தாக்குதல் சம்பமொன்றில் ஒருவர் பலியானதுடன் 12பேர் காயமடைந்துள்ளனர்.
புஜிட் பின் தாங் பிரதேசத்திலுள்ள மதுபானச்சாலைக்கு வெளியே கைக்குண்டை வீசி இருந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். அதே சமயம் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இரண்டாவது வெடிக்காத நிலையிலிருந்த குண்டொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை என்ற போதும் கோஷ்டி மோதலே காரணம் என நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தில் கார் தரிப்பிட பணியாளரான மலேசிய பிரஜை உயிரிழைந்துள்ளார்.
அதேசமயம் காயமடைந்தவர்கள் இரு சீனர்கள், ஒரு சிங்கப்பூர் பிரஜை மற்றும் ஒரு தாய்லாந்து நாட்டவர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment