கருப்பு பண பதுக்கல் விவகாரம்: இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட மத்திய அரசு மறுப்பு

கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்து வெளிநாடுகள் அளித்துள்ள தகவல்களை வெளியிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்திய அரசுடன் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பாக அளித்துள்ள தகவல்களை வெளியிட முடியாதுஎன கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் தகவல்களை வழங்க முடியாது என கூறுவது ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணை அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template