ஜெ.,விற்காக தயாரகும் புழல் சிறை…

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ.,க்கு ஜாமின்க்காக மற்றவர்கள் அலைந்து கொண்டிருக்க, சென்னை புழல் மத்திய சிறையில் ஜெ.,வுக்காக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதாவைப் பார்க்க தினமும் ஏராளமானோர் கர்நாடக சிறைக்கு செல்கின்றனர். ஆனால் ஜெயலலிதா யாரையும் பார்க்க விரும்பாததால், அனைவரும் சிறைவாசல் வரை மட்டுமே போக முடிகிறது. எனினும் நாங்களும் வந்து சென்றோம் என்ற கணக்கிற்காக பலரும் சிறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இவர்களை தினமும் சமாளிக்க வேண்டிய நிலை கர்நாடக போலீஸாருக்கு ஏற்படுகிறது. மேலும் தேங்காய் உடைப்பது, சாமி கும்பிடுவது என்று சிறையை கோவிலாகவே மாற்றி விட்டனர் அதிமுகவினர். இவர்களால் கர்நாடக போலீசுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதால் பேசாமல் ஜெ.,வை தமிழக சிறைக்கு மாற்றி விடலாம் என்று முன்னாள் பிரதமர் தேவ் கெளடா ஆலோசனை கூறினார். அதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெ.,வை தமிழகத்திற்கு மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், சுப்ரீம் கோர்டுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஜெ.,வே சுப்ரீம் கோர்ட்டில் இதற்காக மனு அளிக்க வேண்டும். அதன் பின் சுப்ரீம் கோர்ட் மனுவைப் பரிசீலித்து மாற்ற வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். இதற்கிடையே, ஜெயலலிதாவை புழல் சிறைக்கு மாற்றினால் அவருக்கு தேவையான வசதிகளை இப்போதே புழல் நிர்வாகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் புழல் சிறை நிர்வாகம் இந்த தகவலை இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

ஜெ.,வின் ஜாமினிற்காக அவரது கட்சியினர், பாடாய்படும் வேலையில் யார் எப்படி போனால் நமக்கென்ன நாம் நம் கடமையை செய்வோம் என்று கடமையில் கருத்தாய் செயல்படுகிறது புழல் நிர்வாகம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template