கிட்டத்தட்ட இருபத்தொரு நாட்கள் சிறையில் இருந்த முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளிவந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அபராதத்துடன், 4 ஆண்டு சிறை தண்டனையும் பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த இடைக்காலத்தில் வீட்டுச்சிறையில் இருப்பார் எனவும், மருத்துவர்கள் மற்றும் சில முக்கிய புள்ளிகள் மட்டும் பார்க்கலாம் எனவும் தெரிகிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் வீட்டில் வசிக்கும் அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஜெயலலிதாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வருகிறார். சிறையில் இருந்து வெளிவந்த ஜெயலலிதாவை, தமிழகத்தின் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று வரவேற்றார்.
தமிழகத்தின் அதிமுக அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஆதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment