வவுனியா அந்தோனியார் ஆலய தேர் விஷமிகளால் எரிப்பு

வவுனியா – இறம்பைக்குளத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் இன்று (12) அதிகாலை விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  ஆலயத்தின் பின் பகுதியில் பாதுகாப்பான முறையில் கட்டிடமொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்ட தேரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.  இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு வந்தவர்கள், தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கதவு திறந்திருப்பதை கண்டதுடன் அதனுள் இருந்து புகை வருவதையும் அவதானித்துள்ளனர். பின்னர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் தேரின் அதிகளவான பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலயத்தின் நிர்வாகம் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template